கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலனை

லங்காவி, நவம்பர் 13 :

நாடு முழுவதும் கோழி இறைச்சி விநியோகம் இல்லாததால், அவற்றின் விலை அதிகரித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண, கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்களின் துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் இதுபற்றிக் கூறுகையில், கோழி இறைச்சியின் விலை உயர்வு பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் ஆய்வு செய்த அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் கடந்த வாரம் வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் அமைச்சகத்துடன் (MAFI) இது தொடர்பில் விவாதித்தோம், மேலும் இந்த பிரச்சினைக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் “கோழி விலை மற்றும் விநியோக பிரச்சினைகளை தீர்க்க MAFI செயல்படும்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக, அவர் டத்தாராங் சேனாங்கில் (Dataran Chenang) நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மலேசியன் பொருட்களை வாங்குதல் பிரச்சாரத்தின் (KBBM) விற்பனைத் திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கெடா மாநில சட்டமன்றத்தின் (DUN) சபாநாயகர் டத்தோ ஜுஹாரி புலாட், மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரக் குழுவின் தலைவர் வான் ரோமானி வான் சலீம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹஸ்னோல் ஜாம் ஜாம் அகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here