கிளந்தான் அரசு 400 கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளை GOF படைக்கு நன்கொடையாக வழங்கியது

கோத்தா பாரு, நவம்பர் 16 :

இன்று,பொது நடவடிக்கைப் படையின் (GOF) ஏழாவது பட்டாலியனுக்கு 400 யூனிட் கோவிட்-19 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக் கருவிகளை (RTK-Ag) கிளந்தான் அரசு நன்கொடையாக வழங்கியது.

இங்குள்ள தாருல்நெய்ம் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இப்பரிசோதனைக் கருவிகளை மாநில உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதிக் குழுத் தலைவர் டாக்டர் இசானி ஹுசின, GOF ஏழாவது பட்டாலியன் உதவி கட்டளை அதிகாரி, துணை கண்காணிப்பாளர் கு மஜிதின் சே கு ஜூசோவிடம் வழங்கினார்.

இந்த நன்கொடை, கோவிட்-19 சூழ்நிலையை கையாள்வதில் அதிக ஆபத்துள்ள குழுக்களை உள்ளடக்கிய GOF உறுப்பினர்கள் மற்றும் பிற முன்னணியில் பணியில் இருப்பவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்று டாக்டர் இசானி கூறினார்.

‘சுய பரிசோதனை கருவியின் உச்சவரம்பு விலையை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை’ என்றும் “பணியாளர்களிடையே கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான ஆரம்பகால தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சுய பரிசோதனைக் கருவிகள் பயன்படும் என்றும் அவர் கூறினார்.

“தேசத்துக்காக, குறிப்பாக கிளந்தனுக்காக அவர்கள் ஆற்றிய தியாகங்களோடு ஒப்பிடுகையில், நமது எல்லையை எந்த தேவையற்ற கூறுகளிலிருந்தும் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் இந்த நன்கொடை அமையும்,” என்று அவர் கூறினார்.

இதேபோன்ற நன்கொடைகளை மற்ற முன்னணி வீரர்களுக்கும் விரைவில் மாநில அரசு வழங்கும் என்றார்.

நன்கொடையை பெற்றுக்கொண்ட கு மஜிதீன், மாநில அரசுக்கு நன்கொடை அளித்ததற்கு நன்றி தெரிவித்தார், அத்துடன் இந்த சுய பரிசோதனை கருவி பட்டாலியனுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here