பாசீர் மாஸ், நவம்பர் 16 :
நேற்றிரவு ரந்தாவ் பான்ஜாங்கில் RM110,000 மதிப்புள்ள 8,000 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் 67.5 கிராம் ஹெராயின் வகை போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 30 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் முஹமட் நஸாருடின் எம். நசீர் கூறுகையில், சந்தேக நபர் இரவு 8.30 மணியளவில் தாமான் பெருமஹான், தாமான் ரந்தாவ் மாஸில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்துசென்றனர்.
பின்னர், அவரைச் சோதனையிட்டதில் சந்தேக நபரிடம் மாத்திரைகள் மற்றும் ஹெராயின் அடங்கிய பொதி இருந்ததை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்ததுடன் “தொழிலாளியான சந்தேக நபரை, போதைப்பொருள் தடுப்புக்குழு தடுத்து வைத்தது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் போதைப்பொருள் உள்ளூர் போதைப்பித்தர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்ததாக தெரியவந்துள்ளது என்றார்.
“சந்தேக நபர் ‘ஜெமி’ (Jemey) எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் மூலம் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதற்காக பணியமர்த்தப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்.
மேலும் “போலீசார் இப்போது ஜெமியைத் தேடி வருகின்றனர்” என்றும் முஹமட் நஸாருடின் கூறினார்.























