மலேசியாவில் மிகவும் பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றானதும் முதல் கருங்கல் ஆலயமான கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் குருப் பெயர்ச்சி மகா யாகம் நடைபெற்று என ஆலயத் தலைவர் சங்கரத்னா சித.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.
வருடந்தோறும் மிக விமரிசையாக நடைபெறும் குரு பெயர்ச்சி மகா யாகம் இந்தாண்டு எஸ்ஓபியுடன் நடைபெற்றது. இந்த மகா யாகத்திற்கு டத்தோ சங்கர் நாராயணன் பிரதான உபயதாரர் ஆவர்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கோடிக்கணக்கான அர்ச்சனைகள் நடைபெற்றுள்ளது சிறப்பான அம்சமாகும். இந்த குருப் பெயர்ச்சியின் போது உலக மக்கள் அனைவரும் கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனை முன்வைக்கப்பட்டு என்று ஆலயத்தலைவர் தெரிவித்தார்.





















