ஜோகூர் பாரு, நவம்பர் 20 :
ஜோகூர் பாரு சென்ட்ரல் (JBS) மற்றும் கெமாஸ் பாரு நிலையங்களுக்கு இடையேயான இரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக Keretapi Tanah Melayu Berhad (KTMB) நிறுவனம் தெரிவித்துள்ளது.
KTMB தலைமை இயக்க அதிகாரி முஹமட் ஜெயின் மாட் தாஹா இதுபற்றிக் கூறுகையில், இந்த இரண்டு நிலையங்கள் இடையே மேற்கொள்ளப்படும் Gemas-Johor Bahru மின்விரிவாக்கப்பட்ட இரட்டை தண்டவாளத் திட்டத்தை மேம்படுத்தும் வேலை காரணமாக இந்த தற்காலிக இரயில் சேவையை தாம் அறிவிப்பதாக கூறினார்.
மேலும், “JBS-Woodlands-JBS க்கு இடையில் Tebrau Shuttle சேவைகள் கட்டுமான பணி முடிவடையும் வரை செயல்படும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
– பெர்னாமா