Changkat Raja Chulan ஊழியர்  சேம நிதி வாரிய அலுவலகம் – டிசம்பர் 16 முதல் நிரந்தரமாக மூடப்படும்

Changkat Raja Chulan ஊழியர்  சேம நிதி வாரியம் (EPF)  கிளை அலுவலகம் டிசம்பர் 16 முதல் நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், EPF பங்களிப்பாளர்கள் மற்றும் முதலாளிகள் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் அருகிலுள்ள கிளைகளான ஜாலான் ராஜா லாவூட், வாங்சா மாஜு, கெப்போங், பெட்டாலிங் ஜெயா அல்லது ஶ்ரீ பெட்டாலிங் போன்ற கிளைகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மற்ற மாற்று வழிகளுக்கு, i-Akaun மூலம் EPF இன் சேவைகளை ஆன்லைனில் அணுகுமாறு பங்களிப்பாளர்கள் மற்றும் முதலாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களை EPF இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kwsp.gov.my இல் பெறலாம் அல்லது EPF இன் உறவு மேலாண்மை மையத்தை 03-8922 6000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here