இதுவரை 47,748 சிறைக் கைதிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவுகளும் போடப்பட்டுள்ளது- சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், நவம்பர் 24 :

நவம்பர் 16 ஆம் தேதி வரை மொத்தம் 47,748 சிறைக் கைதிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 42 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

“சிறைச்சாலைகள் மற்றும் குடிநுழைவு தடுப்பு முகாம்கள் போன்றவற்றிலுள்ள கைதிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்துவது, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களில் உள்ள சுகாதார ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பதை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

“நாடு முழுவதும் உள்ள 21 குடிநுழைவு தடுப்பு முகாம்களில், தவாவ், சந்தகன் மற்றும் கோத்தா கினாபாலுவில் உள்ள சில தடுப்பு முகாம்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து கைதிகளுக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,” என்று சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

சிறைகள் மற்றும் குடிநுழைவு தடுப்பு முகாம்களில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் ராம்கர்பால் சிங் (PH-Bukit Gelugor) கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த கைரி, ஜூலை 27 முதல் சரவாக்கில் உள்ள பெக்கனு குடிவரவு தடுப்பு முகாமில் 393 கைதிகளுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது அத்தோடு இரண்டாவது டோஸ் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 377 கைதிகளுக்கும் செலுத்தப்பட்டது.

“அக்டோபர் 11ஆம் தேதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட குடிநுழைவு தடுப்பு முகாம்களிலுள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கை 112,324 பேர் மற்றும் அவர்களில் 3,379 பேர் இரண்டாவது டோஸையும் செலுத்திக்கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here