அம்பாங் ஜெயா, நவம்பர் 24 :
திடீர் வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து இதுவரை மொத்தம் 117 புகார்களை காவல்துறை பெற்றுள்ளது என்று அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்வதை எளிதாக்குவதற்காக, நாம் தற்காலிக வெள்ள நிவாரண மையத்திற்குள் (PPS) நடமாடும் செயல்பாட்டு நிலையத்தையும் அமைத்துள்ளோம் என்றார்.
“இதுவரை வெள்ளத்தின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை அத்தோடு இதுவரை சேத மதிப்பீடுகள் பற்றி அறியமுடியவில்லை”.
“கம்போங் பிங்கிரான் மற்றும் லெம்பா ஜெயா உதாராவில் வெள்ளம் ஏற்பட்டதாக நேற்று இரவு 8.23 மணிக்கு பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முஹமட் ஃபாரூக் கூறுகையில், தகவல் கிடைத்தவுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்த ஐந்து அதிகாரிகள் மற்றும் 40 உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
“பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் கம்போங் பிங்கிரான் 3, கம்போங் லெம்பா ஜெயா உத்தாரா ஆகிய இடங்களில் உள்ள 206 வீடுகள் மற்றும் 1,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
“பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் மண்டபத்தில் உள்ள PPSஇல் தங்க வைக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.