மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டின் 257ஆவது கூட்டத்தில் மாட்சிமை தங்கிய பேரரசர் கலந்து சிறப்பித்தார்

கோலாலம்பூர், நவம்பர் 25 :

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டின் 257 ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்திற்கு, கெடா சுல்தான் அல் அமினுல் கரீம் சுல்தான் சலேஹுதீன் சுல்தான் பத்லிஷா தலைமை தாங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் திரெங்கானு சுல்தான் சுல்தான் மிசான் ஜைனல் அபிடின் , ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா மற்றும் நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்டுவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் அல்மர்ஹூம் துவாங்கு முனாவிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு பகாங்கின் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா அல்-சுல்தான் அப்துல்லா, கிளந்தான் தெங்கு டாக்டர் முஹமட் ஃபைஸ் பெட்ரா சுல்தான் இஸ்மாயில் பெட்ராவின் தெங்கு மகோடா மற்றும் பெர்லிஸ் துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா ஜமாலுல்லைலின் ராஜா மூடா ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் பினாங்கு, மலாக்கா, சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் யாங் டிபர்டுவா நெகிரி மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மலாய் ஆட்சியாளர்கள் அந்தந்த மந்திரி பெசார் உடன் இருந்தனர், அதே நேரத்தில் மாநில ஆளுநர்கள் முதல்வர்களுடன் இருந்தனர், மேலும் சரவாக் தனது துணை முதல்வரை அனுப்பியிருந்தது.

மலாய்ஆட்சியாளர்களின் மாநாட்டின் இறுதிக் கூட்டம் 2020 பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சுல்தான் நஸ்ரின் ஷா தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here