சுங்கை சிப்புட்டில் Pos Beswok செல்லும் பிரதான சாலை நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டது

ஈப்போவில் வியாழக்கிழமை (நவம்பர் 25)ஏற்பட்ட  நிலச்சரிவைத் தொடர்ந்து சுங்கை சிபுட்டில் போஸ் பெஸ்வோக்  (Pos Beswok) செல்லும் பிரதான சாலை மூடப்பட்டுள்ளது. பேராக் உள்கட்டமைப்பு, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துக் குழுத் தலைவர் டத்தோ முகமட் சூல்கிப்ஃளி ஹருன், பழுதுபார்க்கும் பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதி 60 மீ அகலத்தில் 10 மீ முதல் 15 மீ சரிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய கால தீர்வாக, இன்று (வெள்ளிக்கிழமை, நவ. 26)க்குள் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என்றும், சாலை மூடல் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்றும் அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரதான சாலையில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், Kampung Pendeq Pos Yum என்ற இடத்தில் Lata Penyel waterfall செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு சாய்வு மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று முகமட் சூல்கிப்ஃளி மேலும் கூறினார். தடவியல் அறிக்கைகளின் அடிப்படையில், எங்கள் நீண்ட கால தீர்வின் ஒரு பகுதியாக சாய்வு புனரமைப்பு கட்டப்படும்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here