நாட்டிலுள்ள 96.1 விழுக்காடு பெரியவர்களுக்கு முழுமையாக கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், நவம்பர் 28 :

நேற்றைய நிலவரப்படி, மலேசியாவில் மொத்தம் 22,504,497 நபர்கள் அல்லது வயது வந்தோரில் 96.1 விழுக்காட்டினர் தங்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவுகளையும் நிறைவுசெய்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் CovidNow போர்ட்டலின் அடிப்படையில், நாட்டில் உள்ள பெரியவர்களில் 98.4 விழுக்காட்டினர் அல்லது 23,044,851 நபர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினறில், 88.2 விழுக்காட்டினர் அல்லது 2,776,260 நபர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 84.7 விழுக்காட்டினர் அல்லது 2,664,877 நபர்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவுகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

நேற்று, மொத்தம் 54,526 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, அதில் இரண்டாவது டோஸாக 4,737 தடுப்பூசிகளும், முதல் டோஸ் பெறுபவர்களுக்கு 2,522 தடுப்பூசிகளும் மற்றும் பூஸ்டர் டோஸாக 47,267 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

இது மலேசியாவில் இதுவரை தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 53,185,334 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் பூஸ்டர் அளவைப் பொறுத்தவரை, இதுவரை மொத்தம் 2,194,849 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here