வனப்பகுதியில் சட்டவிரோதமாக நடப்பட்டிருந்த 600 மூசாங் கிங் டுரியான் மரங்கள் அழிக்கப்பட்டது ; வன அலுவலகம் தகவல்

ரவூப், டிசம்பர் 6 :

தேராஸ் வனப் பகுதியில் சட்டவிரோதமாக நடப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மூசாங் கிங் குளோன் டுரியான் மரங்களை ரவூப் மாவட்ட வன அலுவலகம் (PHD) இன்று அழித்தது.

கடந்த இரண்டு வருடங்களாக பொறுப்பற்ற தரப்பினரால் தேராஸ் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நான்கு ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த மரநடுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ரவூப் மாவட்ட வன அலுவலக அதிகாரியான ஷஹரில் முகமட் இதுபற்றிக் கூறுகையில், காலை 9 மணிக்கு தொடங்கிய ஐந்து மணி நேர நடவடிக்கையில் 25 பணியாளர்களுடன் ரவூப் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) உறுப்பினர்களின் மேற்பார்வையில் இச் சட்டவிரோத மரங்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

அவரது கூற்றுப்படி, நவம்பர் 26 அன்று தீபகற்ப மலேசியாவின் வனவியல் துறையின் (JPSM) மின்-புவிசார் அமைப்பை (e-Geoformatic System) பயன்படுத்தி, ரோந்து மற்றும் சோதனைகளை நடத்திய பிறகு அவர்கள் அப்பகுதியைக் கண்டறிய முடிந்தது என்றார்.

விசாரணையின் முடிவுகளில், ஒருவர் பல வெளிநாட்டுப் பணியாளர்களைப் பயன்படுத்தி, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

“ஒன்று முதல் இரண்டு வயதுள்ள மூசாங் கிங் டுரியான் மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களின் மதிப்பு RM30,000 க்கும் அதிகமாக இருக்கும்,” என்று அவர் நடவடிக்கையில் பங்கேற்ற பிறகு கூறினார்.

142.7 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய சட்டவிரோத வன காப்பு ஆய்வுகளை எதிர்த்து, ரவூப் மாவட்ட வன அலுவலகம் ஆண்டு முழுவதும் ஐந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஷாரில் கூறினார்.

கடந்த ஜூலையில் பகாங்கில் 101 ஹெக்டேர் பரப்பளவில் 15,000 மூசாங் கிங் டுரியான் மரங்களை அழித்தது குறிப்பிடத்தக்கது என்றார்.

“தேராஸ் வனப்பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மார அழிப்பு இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆறாவது நடவடிக்கையாகும். வனக் காப்பகங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டும் இதே நடவடிக்கை தொடர்ந்து செய்யப்படும்.

மேலும் “நாளை முதல் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என்றும் மொத்தம் 1,500 விதமான மரங்கள் நடப்படுவதற்கு சில நாட்கள் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here