ஜோகூரில் கடன் வாங்குபவர்களை துன்புறுத்தல், வன்முறை மற்றும் போதைப்பொருள் பாவித்தது தொடர்பில் இருவர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு:

ரிமம் பெறாத பணக் கடன் வழங்கும் கும்பலைச் சேர்ந்ததாக நம்பப்படும் இரண்டு ஆடவர்களுக்கு எதிராக, வன்முறை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது, அவர்களுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்களுக்காக இங்குள்ள மூன்று தனித்தனி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 25 வயதான ஆர். சஷ்வின் மற்றும் 31 வயதான பி. யுகேந்திரன் ஆகியோர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை (மே 28) நீதிமன்றம் அவர்களுக்கு அபராதம் விதித்து, தீர்ப்பளித்தது.

மாஜிஸ்திரேட் ஏ. ஷார்மினி, இருவருக்கும் தலா RM4,500 அபராதம் விதித்தார், அல்லது அவர்கள் பணம் செலுத்தத் தவறினால் 12 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

மே 1 ஆம் தேதி இரவு 10.57 மணியளவில், தாமான் புத்திரி வாங்சாவின் ஜாலான் ஜெனாவி 8 இல் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் வாயிலில் வண்ணப்பூச்சு தெளித்ததற்காக, RM35 க்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் நபிலா நிஜாம் முன்நிலையில் வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையின்படி, முதலாவது ஒரு வீட்டின் மீது வண்ணப்பூச்சு தெளித்தது (RM35 சேதத்தை ஏற்படுத்தியது), மற்றொன்று ஹோண்டா சிட்டி காரை சேதப்படுத்தியதது (RM350 சேதத்தை ஏற்படுத்தியது) ஆகிய குற்றங்களுக்காக சஷ்வினுக்கு இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா RM1,000 அபராதம் விதிக்கப்பட்டது:

இந்த சம்பவங்கள் முறையே மே 1 ஆம் தேதி இரவு 10.40 மணியளவில் தாமான் புத்திரி வாங்சாவில் உள்ள ஜாலான் லேடிங் 11 இல் நடந்தன, மற்றையது ஏப்ரல் 27 ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் ஜாலான் துன் அப்துல் ரசாக்கில் நடந்தன.

ஏப்ரல் 28 ஆம் தேதி பிற்பகல் 3.12 மணியளவில் தாமான் ஸ்குடை பாருவில் உள்ள ஜாலான் ஹாங் ஜெபத் 4 இல் உள்ள வீட்டு வாயிலில் சிவப்பு வண்ணப்பூச்சைத் தெளித்ததற்காக யுகேந்திரனுக்கு RM2,200 அல்லது 12 மாத சிறைத்தண்டனையை மாஜிஸ்திரேட் அதிபா ஹசிமா வஹாப் விதித்தார், இதனால் RM249 க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது எனக்கூறப்பட்டது.

இந்தச் செயல்கள் அனைத்தும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427 இன் கீழ் வருகின்றன, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மே 9 அன்று பிற்பகல் 3.20 மணியளவில் தாமான் புத்திரி வாங்சாவில் அதே இடத்தில் ஒரு வீட்டை எரிப்பதாக எழுத்துப்பூர்வ மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட பின்னர், சஷ்வின் மீது குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

இந்த அச்சுறுத்தல் ஒரு அறிவிப்பு மூலம் அநாமதேயமாக விடுக்கப்பட்டது, மேலும் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 இன் கீழ் வருகிறது, இது தண்டனை விதிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

அனால் நீதிபதி ஷார்மினி முன் வாசிக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டிற்கு அவர் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார், இவ்வழக்கில் RM4,000 ஜாமீன் விதிக்கப்பட்டது மற்றும் இந்த வழக்கு வரும் ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சஷ்வின், மே 15 அன்று பிற்பகல் 3.55 மணிக்கு ஜோகூர் பாரு வடக்கு காவல் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் பாவித்ததாக கண்டறியப்பட்டது, ஆபத்தான போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக அவருக்கு RM2,500 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதேநேரம் யுகேந்திரனும் இதேபோன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டார், அதே நாளில் அதிகாலை 4 மணிக்கு போதைப்பொருள் சோதனையில் போதைப்பொருள் பாவித்ததாக கண்டறியப்பட்டது, அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு RM1,800 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

இருவரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் (AADK) இரண்டு ஆண்டுகள் மேற்பார்வையில் இருக்க உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here