எல்.கே.ராஜ்
செந்தூல் வட்டார அளவில் நடைபெற்ற 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட கூடைப்பந்து போட்டியில் செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையில் வாகை சூடியது.
பள்ளியின் முதன்மை பயிற்றுனரான ஆசிரியர் திருமதி கவிதா லெட்சுமணனின் அயராத உழைப்பும் மாணவர்களின் விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

கடந்த 2019-இல் இரண்டாம் நிலையை அடைந்த இப்பள்ளி மீண்டும் 2024-இல் சாதனைப்படைத்திருக்கிறது என்று பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கார்த்திகேசு இராஜகோபால் தெரிவித்தார்.
பெற்றோரின் முழு ஆதரவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஊக்கமும் இம்மாணவர்களின் வெற்றிக்கு ஒரு தூண்டுகோளாக விளங்குகிறது.

இன்னும் வருங்காலங்களில் கூடைப்பந்து போட்டியில் பல சாதனைகளைப் படைக்க மாணவர்களை ஆயத்தம் செய்ய பல முயற்சிகளும் சிறப்பான திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.























