பாலியல் பலாத்கார வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் பால் யோங் தரப்பு தற்காப்பு வாதத்திற்கு உத்தரவு வழங்கியது உயர் நீதிமன்றம்

ஈப்போ, டிசம்பர் 7:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது இந்தோனேசிய பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ட்ரோனோஹ் சட்டமன்ற உறுப்பினர் பால் யோங் சூ கியோங்கை அவரது தரப்பு தற்காப்பு வாதத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முஹமட், யோங்கின் தற்காப்பு வாதத்திற்கான விசாரணையை பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் ஒத்திவைத்தார்.

51 வயதான யோங், ஜூலை 7, 2019 அன்று இரவு 8.15 மணி முதல் 9.15 மணி வரை மேரு தேசா பார்க்கில் உள்ள அவரது வீட்டில், தனது 23 வயது இந்தோனேசியப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (1) இன் கீழ் யோங்கிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. இக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படியும் வழங்க வழிசெய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here