சிலாங்கூர் வெள்ளத்தில் ஆடவர் பலி

வாரயிறுதியில் சிலாங்கூரில் ஏற்பட்ட வெள்ளம், ஷா ஆலமில் ஒரு நபர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. பலியானவர் 30 வயதுடைய மலேசியர் என்று ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் பஹாருடின் மாட் தாயிப் தெரிவித்தார்.

நேற்று இரவு 7.50 மணியளவில் நீர்மட்டம் குறையத் தொடங்கிய பின்னர், ஷா ஆலம், செக்சியன் 22 இல் உள்ள ஆலம் இடமான் குடியிருப்புக்கு அருகில் அவரது உடல் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் அப்பகுதிக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியான் மெட்ரோவின் அறிக்கையின்படி அவர் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here