வெள்ளத்தினால் தனிப்பட்ட ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை இலவசமாகப் பெறலாம் என்கிறார் ஹம்சா சைனுடின்

உலு லங்காட், டிசம்பர் 20 :

வெள்ளத்தால் தங்கள் அடையாள அட்டை, கடப்பிதழ் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை இழந்தவர்கள் உள்துறை அமைச்சகத்தின் ஏஜென்சிகளின் கீழ், இந்த ஆவணங்களை இலவசமாகப் பெறலாம் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் தனிப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்ட அல்லது இழந்தவர்களுக்கு உதவ, தேசிய பதிவுத் துறை மற்றும் குடிநுழைவுத் துறைக்கு உத்தரவிடப்படும் என்று அவர் கூறினார்.

“இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகள் அல்லது கடைகளை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தலாம்,” என்று அவர் இன்று, கம்போங் ஜாவாவில் உள்ள பத்து 18, கம்போங் ஜாவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கிய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராயல் மலேசியா காவல்துறை (PDRM) நடத்திய மெதுவான மீட்பு நடவடிக்கைகள் குறித்து நெட்டிசன்களின் கூற்றுக்கள் குறித்து, கருத்து தெரிவித்த ஹம்சா: “தேவையான உதவி குறித்த தகவல்களை அறிவிப்பு செய்த பொதுமக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன், ஆனால் இதுபோன்ற மோசமான வெள்ள நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலாங்கூரில் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது.

“பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் நுழைவதில் ஏற்படும் தடைகள் மற்றும் சிக்கல்கள் பற்றியும் நாம் பார்க்க வேண்டும்.” என்று மேலும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here