ஜூனியா் ஆடவர் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா தோல்வி

பெட்டாலிங் ஜெயா:

ஜூனியா் ஆடவர் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசிய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியிடம் தோல்வி கண்டது.

புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் நடைபெற்ற அவ்வாட்டத்தில் நடப்பு வெற்றியாளரான அர்ஜெண்டினா அணியுடன் மலேசிய அணி மோதியது.

இதில் தோல்வியடைந்தால் மலேசிய அணி காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு சிரமத்தை எதிர்க்கொள்கிறது.அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாட்டின் இளம் வீரர்கள் பல வாய்ப்புகள் இருந்தும் எந்த கோல்களையும் அடிக்கவில்லை.

இந்தத் தோல்வியால் ஏ பிரிவில் மலேசியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here