துபாயில் வீட்டின் பல்கனியில் துணி காயவைத்தால் Dh1,500 அபராதமாம்!

துபாய் நகரில் இருக்கும் அடுக்குமாடி மற்றும் சொகுசுமாடிக் குடியிருப்புகளின் பல்கனியில் துணியை காயப்போடுதல் கூடாது, பறவைகளுக்கு உணவளிக்க கூடாது, தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது என்றும் அப்படி மாட்டினால் அபராதம் விதிக்கப்படுமெனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துபாயில் வசிப்பவர்கள் நகரம் முழுவதும் அழகியல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும் என்பதுடன் , தங்கள் அடுக்குமாடி பல்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் நகராட்சியால் பகிரப்பட்ட செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு பிறருடைய கண்களை உறுத்தும் விதத்தில் பல்கனிகள் அமையக்கூடாது என்றும் இது குறித்து சுற்றுச்சூழலுக்கான தேவைகள் மற்றும் தரநிலைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நகரத்தின் பொதுவான அழகியல் மற்றும் நாகரீக தோற்றத்தை சிதைப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களை துபாய் நகராட்சி சார்பில் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பல்கனியில் செய்யக்கூடாதவை:-

1.துணி காயப்போடுதல் கூடாது

2. சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது

3. குப்பைகளை வீசக் கூடாது

4.பல்கனியை கழுவும்போது அந்த அழுக்கு தண்ணீர் வெளியே வர கூடாது

5. பல்கனியில் பறவைகளுக்கு உணவளிக்க கூடாது

6. தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது

அதேவேளை பல்கனிகளை தவறாகப் பயன்படுத்தினால் 500 முதல் 1,500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here