MyUbat டெலிவரி சேவையில் தவறான தகவல் தொடர்பே சிக்கலுக்கு காரணம் என்கிறது HKL

கோலாலம்பூர் மருத்துவமனை (HKL) மருந்தகத்தில் புகார்தாரருக்கும் அதிகாரிக்கும் இடையே MyUbat டெலிவரி சேவை குறித்து தவறான தகவல் தொடர்பு ஏற்பட்டது என்று மருத்துவமனையின் இயக்குநர் கூறுகிறார்.

ஒரு வைரலான சமூக ஊடக இடுகைக்கு பதிலளிக்கும் விதமாக, மருத்துவமனை இயக்குனர் ஒரு அறிக்கையில், குறைந்த விநியோகம் காரணமாக சில மருந்துகளுக்கு MyUbat சேவையை செயல்படுத்த முடியாது என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

MyUbat என்பது ஒரு மொபைல் பயன்பாடாகும்.இது பயனர்கள் தங்கள் மருந்து வழங்கல் மற்றும் விநியோகத்தை நாடு முழுவதும் உள்ள பொது மருந்தகங்களில் நிர்வகிக்க அனுமதிக்கிறது. எனவே, கூரியர் மூலம் MyUbat பயன்பாடு மற்றும் டெலிவரி சேவையைப் பயன்படுத்த, மருந்தின் பேக்கேஜிங் (செயல்முறை) இரண்டு வாரங்களுக்கு முன்பே செய்யப்பட வேண்டும்.

மருந்து விநியோக இருப்பு இயல்பு நிலைக்குத் திரும்பும் போது MyUbat சேவை வழக்கம் போல் இயங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொறுப்பதிகாரி அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Syafarizal Sharif என்ற நபரின் பதிவு வைரலாக பரவியது.  முகப்பிடத்தில் பணியாற்றிய அதிகாரி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார். வழக்கமாக எனது  மருந்து சப்ளை MyUbat அப்ளிகேஷன் மூலம் செய்யப்படும். பின்னர் அது கட்டண கூரியர் மூலம் டெலிவரி செய்யப்படும். (இருப்பினும்,) ஜனவரி 10 காலை HKL மருந்தகத்தில் ஒரு சம்பவம் நடந்தது என்று அவர் எழுதினார்.

MyUbat சேவையால் வழக்கம்போல் அவருக்கு மருந்துகளை ஏன் டெலிவரி செய்ய முடியவில்லை என்று Syafarizal கேள்வி எழுப்பியபோது, ​​அதிகாரிகளில் ஒருவருடனான அவரது முதல் உரையாடல் சரியாக முடிவடையவில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மருந்தகத்திற்குச் சென்று மருந்தைப் பெற்றுக்கொள்ளும்படி மட்டுமே அதிகாரி அறிவுறுத்தினார்.

இருப்பினும், தான் சுங்கை பூலோவில் வசிப்பதாகவும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை HKLக்கு வருவது தனக்கு ஒரு சிரமமாக  இருக்கும் என்றும் Syafarizal கூறினார். டைப் ஒன் அலர்ஜிக் Anaphylaxis நோயாளியாக இருப்பதாகவும் மருந்தின் பற்றாக்குறை தன்னை anaphylactic shock ஆளாக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

மற்றொரு சக ஊழியரிடம் பேசுவதற்கு முன், மருந்தாளர் தனது விளக்கத்திற்கு “அது எனது பிரச்சனை அல்ல” என்று பதிலளித்ததாகவும், அதன்பிறகு வேறு மருத்துவமனையில் இருந்து மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தார். நான் எனது தொலைபேசியை எடுத்து, நாங்கள் பேசிக்கொண்டிருந்த உரையாடலைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன். மேலும் இந்த சம்பவத்தை MOH (சுகாதார அமைச்சகம்) க்கு அனுப்ப அதிகாரியின் விவரங்களைக் கேட்டேன்.

“நான் வீட்டிற்குச் சென்ற பிறகு, எனக்கு HKL இலிருந்து அழைப்பு வந்தது,” என்று Syafarizal கூறினார், ஒரு அதிகாரி சிக்கலைத் தீர்க்க முயன்றார். எவ்வாறாயினும், இந்த விவகாரத்தை அமைச்சகத்திடம் கொண்டு செல்ல முடிவு செய்திருந்தார். சமூக ஊடகத்தில் இந்த பதிவு 19,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றது மற்றும் 6,900 முறை பகிரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here