பேராக் சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்

பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு, சட்டவிரோதமான போதைப் பொருட்களை  உட்கொண்டதாக  கூறி காவலில் வைக்கப்பட்ட ஒரு நாள் கழித்து போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரது வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர், அவர் விடுவிக்கப்பட்டதை மலேசியாகினியுடன் உறுதிப்படுத்தினார். “ஆம், அவர் கைது செய்யப்பட்டார். இன்று அவரது விளக்கமறியல் விசாரணைக்காக நான் ஆஜராகியிருந்தேன். காவல்துறை நான்கு நாட்கள் அவகாசம் கேட்டது. ஆனால் நான் காவலில் வைக்க மறுத்தேன். அவரை விடுவிக்க (மாஜிஸ்திரேட்) நீதிமன்றம் தீர்ப்பளித்தது, என்று அவர் மேற்கோள் காட்டினார்.

டிஏபியுடன் இருக்கும் டெரன்ஸ், 2018 பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் அருகே உள்ள Pasir Bedamar சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது பாரிசான் நேஷனல் போட்டியாளரை விட 14,520 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்றார்.

நேற்றிரவு பினாங்கில் பிராஃய் உள்ள இரவு விடுதியில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்ததாகக் கூறப்படும் பேராக் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இன்று முன்னதாக எப்ஃஎம்டி தெரிவித்திருந்தது.

பிராஃய் மெகா மால்  உள்ள கேடிவியின் (கரோக்கி பார்லர்) இரவு விடுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட  மேலும் 35 பேருடன் காணப்பட்டதாக ஒரு போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. பட்டியலிடப்பட்ட ஆபத்தான போதைப்பொருளைப் பயன்படுத்தினால், RM5,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here