‘உனைக் காணாது நான்’ என்ற பாடலின் நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்

டெல்லி, ஜனவரி 17 :

இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் கதக் ஜாம்பவாநுணா பண்டிட் பிர்ஜு மகராஜ், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

83 வயதான பிர்ஜூ, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பினால் இன்று உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு பிர்ஜு மகராஜ் தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது உடல்நிலை மோசமடைந்து சுயநினைவு இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பண்டிட் பிர்ஜூ அவர்கள் பத்ம விபூஷன் விருது மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற ‘உனைக் காணாது நான்’ என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here