மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா நேற்று முதல் தேசிய இதயக் கழகத்தின் (IJN) அரச வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மாமன்னர் சில நாட்கள் சிகிச்சையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 24, 2020 அன்று அவர் தனது முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களுக்குச் செய்த சிகிச்சையைப் பற்றிய உடல்நலப் பரிசோதனை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவார் என்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அவரது கால்களில் காயம் ஏற்பட்டதைக் காட்டியதை அடுத்து, மன்னர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.