நாட்டில் இதுவரை 11,119,363 பெரியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜனவரி 26 :

நேற்றிரவு 11.59 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 11,119,363 நபர்கள் அல்லது 47.5 விழுக்காடு பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்.

COVIDNOW இணையதளம் மூலம் சுகாதார அமைச்சகத்தின் (MOH) தரவுகளின்படி, பெரியவர்கள் மொத்தம் 25,702,311 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முழு அளவையம் போட்டு முடித்துள்ளனர், அதே நேரத்தில் 26,062,066 நபர்கள் அல்லது 99.1 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக்கொண்டுள்ளனர் என்று கூறுகிறது.

12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினரில், மொத்தம் 2,783,457 நபர்கள் அல்லது 88.4 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 2,865,416 நபர்கள் அல்லது குழுவில் 91.0 சதவீதம் பேர் கோவிட்-19 குறைந்தபட்சம் தடுப்பூசியின் ஒரு டோஸ் அளவை பெற்றுள்ளனர்.

நேற்று 213,226 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டது. அதில் முதல் டோஸாக 2,169 தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக 2,680 தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டது. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 62,679,781 ஆகக் கொண்டுவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here