மனிதர்கள் இறவாமல் வாழ்வதற்கு, இன்றளவும் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இறப்பை தடுக்க முடியாவிட்டாலும், முதுமையின்றி நீண்ட காலத்திற்கு இளமையாக வாழ அறிவியல் நமக்கு வழி காட்டுகிறது.
அந்த வகையில், நம் வாழ்வியல் முறை நாம் இளமையாக வாழ ஒரு பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. நம் வாழ்க்கையில் எதை செய்தால் இளமையை நீட்டிக்க முடியும்? இதோ சில குறிப்புகள்:
- சீரான உடற்பயிற்சி
- யோகப்பயிற்சி
- ஆரோக்கியத்திற்கு தேவையான பழ வகைகள்
- அளவான உணவுப்பழக்கம்
- தேவையான அளவு நீர் அருந்துதல்
- தேவையான அளவு உறக்கம்
- ஆரோக்கியமான மனநிலை
- அனைவரிடத்தும் அன்பு செலுத்துதல்
- புகைபிடிப்பதை தவிர்த்தல்
- மது மற்றும் போதை பொருட்களை தவிர்த்தல்
- அதிகமான ரசாயன பொருட்களை தவிர்த்தல்
மேலே குறிபிடப்பட்டுள்ள வாழ்வியல் முறைகள் நாம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இளமையாக வாழ வழி வகுக்கும். அதுமட்டுமின்றி நம் பண்டைக் காலம் தொட்டே நமது முன்னோர்கள் கடைபித்து வந்த உணவு முறைகளும் உணவும் நம் இளமையை பாதுகாப்பதில் பங்கு வகிக்கின்றன.
அவ்வாறாக நம் முன்னோர்கள் நமக்கு பரிசாக கொடுதுச்சென்ற ஒரு கனி வகை தான் நெல்லிக்கனி (Indian Gooseberry or Amla). நெல்லிக்கனி இளமையை பாதுகாப்பதில் சிறந்த ஒரு உணவாக அமைந்திருக்கிறது. இதை இன்றய அறிவியல் தனது ஆராய்ச்சிகளின் வழி பறைசாற்றுகிறது.
ஆண்டிஓக்ஷிடண்ட் (Antioxidant) என அறியப்படும் ஒரு வகை வேதிப்பொருள், நம் உடலில் இருக்கும் அல்லது உருவாகும் பிரீரடிக்கல் (Free Radical) எனும் வேதிப்பொருளை தடுக்க வல்லது. இந்த பிரீரடிக்கல், நம் உடல் உணவை ஜீரணிக்கும் போது உருவாகின்றன, சிகரெட் புகையினாலும், கதிர்வீச்சினாலும் அல்லது வேறு காரணிகளாலும் உடலில் உருவாகிறது.
ப்ரீ ரடிக்கல் நமது உடலில் உள்ள செல்களை சேதம் செய்யக்கூடிய ஒரு வேதிப்பொருளாகும். இதன் காரணமாக பல்வேறு நோய் நம் உடலில் தோன்றுகின்றன, அதுமட்டுமின்றி நம் உடலிலுள்ள செல்களின் ஆற்றலை குறைத்து, முதுமை தோற்றதிற்கு காரணமாக அமைகிறது.
ஆகவேதான் தேவையான அளவு ஆண்டிஓக்ஷிடண்ட்டை (antioxidant), எடுதுக் கொள்வதன் மூலம் இளமையை பாதுகாக்கமுடியும் என்பதை இன்றைய அறிவியல் உறுதி படுத்துகிறது. அந்த வகையில் நெல்லிக்கனி இயற்கையில் சிறந்த வீரியமான ஆண்டிஓக்ஷிடண்ட்டை (antioxidant) கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
போதுமான அளவு நெல்லிக்கனியை உணவாக எடுத்துக்கொள்ளும் போது நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு நெல்லிக்கனிகளை எடுதுக்கொண்டால் போதுமானது என்பது பொது கருத்தாக உலவுகிறது.




















