USIM மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 4 மாணவர்கள் காயம்!

நீலாய், பிப்ரவரி 8 :

இன்று, இங்குள்ள பண்டார் பாரு நீலாயிலுள்ள துரித உணவு விடுதிக்கு அருகில் உள்ள சாலையில், சயின்ஸ் இஸ்லாம் மலேசியா பல்கலைக்கழக (USIM) மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குதானது. இவ்விபத்து சாலையிலிருந்த எண்ணெய்க் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சம்பவத்தில், மரத்தில் மோதியதாக நம்பப்படும் பேருந்து, சாலையில் சறுக்கி கவிழ்ந்ததில் நான்கு USIM மாணவர்கள் காயமடைந்தனர்.

நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டு அதிகாரி ரைஹான் சே மாட் கூறுகையில், சம்பவம் தொடர்பில் தங்களுக்கு காலை 7.41 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், எட்டு நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு தாம் வந்ததாகவும் கூறினார்.

பேருந்தில் 17 மாணவர்கள் USIM பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார்.

“சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​மரத்தில் மோதியதாக நம்பப்படும் ஒரு பேருந்து, சாலையின் ஓரத்தில் சறுக்கி கவிழ்ந்த நிலையில் கிடந்தது.

“அந்த இடத்தில் எண்ணெய் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நான்கு மாணவர்கள் கைகள், மணிக்கட்டுகள் மற்றும் முதுகுத்தண்டில் காயம் அடைந்துள்ளனர்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவரது கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் அவசர சேவை உதவிப் பிரிவு (EMRS) ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஆம்புலன்ஸ் மூலம் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு (HTJ) சிரம்பானுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here