பினாங்கில் கடும் புயல்; பல வீடுகள் மற்றும் மீன்பிடி படகுகள் சேதம்

பத்து காவான், பிப்ரவரி 17 :

இன்று அதிகாலை பினாங்கில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் பூலாவ் அமான், தெலுக் கும்பார் மற்றும் பாலிக் பூலாவ் ஆகிய இடங்களில் உள்ள பல வீடுகள் மற்றும் மீன்பிடி படகுகள் கடுமையாக சேதமடைந்தன.

பூலாவ் அமான் கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) தலைவர் சைபி அப்துல் மஜித் கூறுகையில், இபகுதியில் அடிக்கடி கனமழையைக் பெய்து கொண்டிருந்தது, ஆனால் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், பெரும் புயல் காற்று வீசியது என்றார்.

“இவ் அசுர மழை மற்றும் புயலால், பல வீடுகள் இடிந்தன மற்றும் 12 மீன்பிடி படகுகள் கவிழ்ந்து மூழ்கின. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ”என்று கூறினார்.

116.5 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த தீவு பத்து காவானில் உள்ள பத்து மூசாங் படகுத்துறையிலிருந்து 10 நிமிட படகு சவாரி மூலம் அடையலாம் மற்றும் இங்கு சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் ஒரே பாரம்பரிய மலாய் மீனவ கிராமமாகும்.

இதற்கிடையில், தெலுக் கும்பார் மீனவர் பிரிவுத் தலைவர் ரோஸ்லிசான் ரம்லி கூறுகையில், அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு சிறிய சுனாமியைப் போன்றது என்றும், பெரிய அலைகளால் படகுத்துறையில் இருந்த 6 ஃபைபர் படகுகள் மோசமாக சேதமடைந்து, படகு உரிமையாளர்களுக்கு RM10,000 முதல் RM15,000 வரை இழப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.

“இரண்டு மணி நேர புயலின் போது, ​​கடல் அலைகளால் படகுகள் அடிபடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. “என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பாண்டோக் உபே, பாலிக் பூலாவ் என்ற இடத்தில், இன்று காலை ஏற்பட்ட புயலின் போது வேரோடு சாய்ந்த பழ மரம் அவர்களின் வீட்டின் மீது மோதியதில், ஏழு குடும்பங்கள் குறுகிய நேரத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

58 வயதான எம்.குணேஸ்வரி இதுபற்றிக் கூறுகையில், இரண்டு மாடிகளைக் கொண்ட குடும்ப வீட்டின் மேல் தளத்தில் படுக்கைக்குச் செல்லவிருந்தபோது, ​​தனது கணவர் எம்.வீரமணி, 60, மீது தூண் இடிந்து விழுவதற்கு முன்பு பலத்த சத்தம் கேட்டது.

“எனது மாமியார் எஸ். சுப்பமா, 74, மூன்று மாத பேத்தி உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்கள் தரை தளத்தில் இருந்தனர். என் கணவர், மாமியார் மற்றும் நான் சிறு காயங்களுக்கு உள்ளாகி பாலிக் பூலாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். வீட்டின் மேல் தளத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்தன,” என்று அவர் தனது வீட்டில் சந்தித்தபோது கூறினார்.

பூலாவ் பேதொங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் துவா இஸ்மாயிலைத் தொடர்பு கொண்டபோது, ​​சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி கிடைப்பதை காண முடிவதாக கூறினார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here