அமைச்சர் ஹிஷாமுடினுக்கு கோவிட்-19 தொற்று உறுதி

ஷா ஆலாம், பிப்ரவரி 22 :

மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) ஹிஷாமுடின் ஹுசைன் கோவிட் -19க்கு எதிரான சோதனையில் சாதகமான பதிலைப் பெற்றதன் காரணமாக, தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார்.

மேலும் அவர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் கீழ் நடைமுறையிலுள்ள தேவையான கட்டாய SOP களை அவர் பின்பற்றுவார் என்றும் அவரது அலுவலகம் ஒரு முகநூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19க்கான RT-PCR பரிசோதனையில் அவர் நேர்மறையாக இருப்பதாக சுய-பரிசோதனை கருவி காட்டியதைத் தொடர்ந்து, அவர் மேலதிக பரிசோதனை செய்ததாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடைசியாக பிப்ரவரி 18 அன்று ஆர்டி-பிசிஆர் சோதனைக்குப் பிறகு எதிர்மறையான பதிலைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here