திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,971 ஆக அதிகரிப்பு

கோல திரெங்கானு, பிப்ரவரி 28 :

திரெங்கானுவில் மாநிலத்தில் சில மாவட்டங்களில் மழை நின்றுவிட்டாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, எட்டு மாவட்டங்களிலும் செயல்பாட்டிலுள்ள 160 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 3,875 குடும்பங்களைச் சேர்ந்த 13,971 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும், திரெங்கானுவில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களான கெமாமனில் அதிகபட்சமாக 4,420 பேரும், உலு திரெங்கானுவில் 3,696 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, டுங்கூனின் பெசுட்டில் 1,622 பேரும், செத்தியூவில் 1,291பேரும், கோல திரெங்கானுவில் 614 பேரும், கோல நெராஸில் 324 பேரும் மற்றும் மாராங்கீழ் 5 பேருமாக உள்ளது” என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் அது தெரிவித்திருந்தது.

கோல திரெங்கானுவில் தற்போதைய வானிலை இன்று காலை சிறப்பாக இருந்தது, ஆனால் மற்ற ஏழு மாவட்டங்களில் இன்னும் மழை மற்றும் மேகமூட்டத்துடன் இருப்பதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here