தாப்பாவில் நடந்த நெடுஞ்சாலை விபத்து – 11 வயதான அஷ்விகா நீலவாணன் சம்பவ இடத்திலேயே பலி

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 340.2 ஆவது கிலோ மீட்டரில் இன்று நண்பகல் 1.30 மணியளவில் நடந்த சாலை விபத்தில் நிசான் அல்மேரா சம்பந்தப்பட்ட கார் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி பின்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி தூக்கி வீசப்பட்டார்.

வாகனத்தில் பயணித்த பினாங்கு நகராண்மைக்கழக உறுப்பினரான  நீலவாணன்  மதியழகன் ( 38 வயது), அவரது மனைவி ஜிஷாந்தினி ஏ/பி சுப்ரமணியம் (37 வயது) மற்றும் அவர்களின் 10 வயதான  இரண்டாவது மகளான  தர்சிகா  நீலவாணன் ஆகியோர் காயங்கள் இன்றி தப்பிய வேளையில், அவர்களின் 11 வயது மகளான அஷ்விகா  நீலவாணன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அதே வேளை அவர்களின் 6 வயது மூன்றாவது மகள் இடது கால் மற்றும் இடது கை உடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் புஸ்பகம் ஆய்வுக்காக தடுத்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here