சிரம்பான் கம்போங் டெமியாங்கில் ஏற்பட்ட தீயினால் பலர் வீடுகளை இழந்த துயரம்

சிரம்பான் கம்போங் டெமியாங்கில் உள்ள அவர்களது வீடுகள் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானதால், நான்கு குழந்தைகள் உட்பட 7 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை இழந்திருக்கின்றனர்.

சம்பவம் குறித்து அதிகாலை 2.06 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமது இட்ரிஸ் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, தீ ஏற்கனவே 90 % அதிகமான மர வீடுகளை அழித்துவிட்டதை நாங்கள் கண்டோம். ஆனால் 30களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்ததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

வீடுகளுக்குப் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டறையிலும் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here