தேநீர் (டீ-யில்) பிஸ்கட் தொட்டு சாப்பிடுவீங்களா? முதல்ல இத படிங்க

நீங்கள் தேநீர் (டீ) பிரியரா? டீ குடிக்காமல் இருக்க முடியாதா? முக்கியமாக டீ குடிக்கும் போது பிஸ்கட் தொட்டு சாப்பிடுவீர்களா? இனிமேல் அப்படி சாப்பிடாதீர்கள். ஏனெனில் டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடுவதால், உடலில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் போது பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்பதைக் காண்போம்.

உடல் பருமனாகும்

பிஸ்கட்டில் ஹைட்ரோஜினேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கும். பிஸ்கட்டுகள் கொழுப்பின்றி இருக்காது. ஆகவே நீங்கள் பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிடுபவராயின், அது உடல் பருமன் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இரத்த சர்க்கரை அதிகரிக்கும்

சர்க்கரை நிறைந்த பிஸ்கட்டை டீயில் தொட்டு நீண்ட காலமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும் இதில் சோடியமும் அதிகம் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளும், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் பிஸ்கட்டை சாப்பிடக்கூடாது.

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும்

பொதுவாக சர்க்கரை நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிட்டால், அது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து பலவீனமாக்கிவிடும். எனவே இப்பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

மலச்சிக்கல் ஏற்படும்

பிஸ்கட்டுகளானது சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து சுத்தமாக இல்லை. ஆகவே பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இது தவிர, பிஸ்கட்டுகளில் BHA மற்றும் BHT எனப்படும் இரண்டு பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.

பல் சொத்தை

பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. தினமும் பிஸ்கட்டை சாப்பிட்டால், அது பற்களின் எனாமலை சேதப்படுத்தும். இதன் விளைவாக பற்களில் துவாரங்கள் உருவாகி, பல் சொத்தையை உண்டாக்கும். எனவே நீங்கள் பல் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here