ரயில்வே துறையை நிர்வகிப்பது தொடர்பில் ஜப்பானிடமிருந்து மலேசியா அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் டாக்டர் வீ

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 :

ரயில்வே துறையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து ஜப்பானிடம் இருந்து மலேசியா நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறுகிறார்.

மலேசியாவுக்கான ஜப்பானிய தூதர் தகாஹாஷி கட்சுஹிகோவிடம் இருந்து மரியாதை நிமித்தமான அழைப்பைப் பெற்றதாகவும், இரு நாடுகளிலும் நிலம், விமானம் மற்றும் கடல்சார் முன்னேற்றங்கள் குறித்து பேசியதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, டாக்டர் வீ மற்றும் தகாஹாஷி ஆகியோர் மலேசியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடினர். மேலும் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக அவை தொடரப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இன்று (ஏப்ரல் 26) டாக்டர் வீ பதிவிட்ட ஒரு முகநூல் பதிவில், நன்கு வளர்ந்த ரயில் தொழில்துறையைக் கொண்டிருப்பதால், மலேசியா ஜப்பானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்றும் அவர்களின் நிபுணத்துவத்தால் நாம் பயனடையலாம் என்றும் பதிவிட்டிருந்தார்.

“ECRL, RTS Link, MRT3 போன்ற மெகா திட்டங்களின் மேம்பாடு மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன அல்லது விரைவில் நடைபெறவுள்ளன” என்று தாம் தகாஹாஷி கட்சுஹிகோவுடன் பகிர்ந்து கொண்டேன் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here