பட விழாவில் பாலியல் பலாத்காரம்; ஆஸ்கார் விருது பெற்ற சினிமா டைரக்டர் கைது

பட விழாவில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்கார் விருது பெற்ற சினிமா டைரக்டர் பால் ஹக்கீசை இத்தாலி போலீசார் கைது செய்தனர்.

கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் டைரக்டர் பால் ஹக்கீஸ். இவர் 2006-ம் ஆண்டு கிராஷ் என்ற படத்தில் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக ஆஸ்கார் விருது பெற்றார். சில தினங்களுக்கு முன்பு இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்க பால் ஹக்கீஸ் சென்று இருந்தார். இதற்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் ஓட்டல் அறையில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்ணை பால் ஹக்கீஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பால் ஹக்கீசை இத்தாலி போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பால் ஹக்கீஸ் வக்கீல்கள் கூறும்போது, “பால் ஹக்கீசுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்படும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here