பாலிங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தொடர்ந்து, அப்பகுதியில் அவசரநிலையை அறிவியுங்கள் என்கிறார் கெடா மந்திரி பெசார்

பாலிங், ஜூலை 5 :

பாலிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மாநில மற்றும் கூட்டாட்சி அமைப்புகளின் உதவியை விரைவுபடுத்துவதற்காக, நிலை I அல்லது II அவசரநிலைப் பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அரசின் உத்தரவுப்படி, மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆலோசனையின் பேரில், மூன்றாம் நிலை அவசரகாலத்தை அறிவிக்கும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் இயக்குநராக உள்ள மாவட்ட அதிகாரியால் நிலை I அவசரகால அறிவிப்பை அறிவிக்கலாம் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், சம்பந்தப்பட்ட முகவர் நிலையங்களுக்கு உதவுவதை இந்தப் பிரகடனம் எளிதாக்கும்.

மாநில செயலாளர் அம்மார் ஷேக் மஹ்மூத் நைம் தலைமையில் இன்று நடைபெறும் மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில், இது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் இப்பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று இங்குள்ள குபாங்கில் உள்ள கம்போங் இபோயில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு மாத கர்ப்பிணி உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெள்ளத்தினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி, ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 334 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here