கோலாலம்பூர், ஜூலை 6 :
ஜாலான் தாமான் செலாயாங் ஜெயாவில் பெரோடுவா மைவி காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
திடீரென காரை சாலையில் வெட்டுவதும், பலமுறை பிரேக் செய்வதுமான அந்த கார் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட சம்பவத்தின் 14 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜைனல் முகமட் முகமட் கூறுகையில், “அந்த மைவி கார் ஓட்டுநருக்கு எதிராக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபரை நாம் தேடி வருகிறோம்” என்றார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)ன் கீழ் கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி முகமட் ஷைபுதீன் முகமது நோர் அல்லது 017-6645812 அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.