ரோஸ்மா வழக்கு: ரோஸ்மா மன்சோரின் விண்ணப்பத்தின் மீதான முடிவு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 1 :

நீதிபதி முஹமட் ஜைனி மஸ்லான் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் தனக்கு எதிரான இந்த ஊழல் வழக்கை விசாரிக்கவோ அல்லது முடிவெடுப்பதில் இருந்து அவரை விலக்கிக் கொள்ளுமாறு, டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீதான முடிவு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரோஸ்மாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜித் சிங் மற்றும் துணை அரசு வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ராம் ஆகியோரின் வாத, பிரதிவாதங்களை கேட்டபின் நீதிபதி முஹமட் ஜைனி இதனை அறிவித்தார்.

முன்னதாக ரோஸ்மாவின் சார்பாக அவரது வழக்கறிஞர், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று, இந்த வழக்கின் தீர்ப்பை தயாரித்தது முஹமட் ஜைனி அல்ல, மாறாக வேறு தரப்பினர் என்று ஒரு செய்தி இணையதளம் வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று தான் எதிர்கொள்ளும் ஊழல் வழக்கில் முடிவெடுக்க வேண்டிய உயர்நீதிமன்ற நீதிபதி முஹமட் ஜைனி மஸ்லான் மீது தான் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி, மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here