சிரம்பான், செப்டம்பர் 9 :
இங்கு அருகே உள்ள லுகூட், பண்டார் டாத்தாரான் சேகர் என்ற இடத்தில், நேற்று மாலை ஒரு வீட்டில் கணவன், மனைவி ஆகியோர் இறந்து கிடந்தனர்.
போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முகமட் கூறுகையில், 61 வயதான ஒரு ஆணும், 58 வயதுடைய அவரது மனைவியும் சுயநினைவின்றி இருப்பதாக தாம் சந்தேகிக்கப்படுவதாக, மாலை 5.15 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவரது தரப்புக்கு தகவல் கிடைத்தது.
“போர்ட்டிக்சன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரின் உதவியுடன் போலீசார் வீட்டின் முன்பக்க கதவின் கைப்பிடியை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
சம்பவ இடத்தில் இருந்த லுகூட் ஹெல்த் கிளினிக் மருத்துவ அதிகாரி, அவர்கள் இருவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
“பாதிக்கப்பட்ட ஆண் உயர் இரத்த அழுத்தம் காரணாமாக சிகிச்சை பெற்றுவந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது, அவரது மனைவி எந்த சிகிச்சையும் பெற்றுவரவில்லை என்றும் இந்த சம்பவத்தில் எந்த குற்ற நடவடிக்கையின் எந்த கூறுகளையும் கண்டுபிடிக்கவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இறந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.