மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 28 :

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் அறுவரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பெ எங் லாய் தெரிவித்தார்.

மேலும், அக்கும்பலிடமிருந்து பல்வேறு மோட்டார் சைக்கிள் பாகங்கள் மற்றும் நான்கு பிரேம்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கடந்த 20 மற்றும் 21 ஆம் தேதிகளில், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் போன்ற பல இடங்களில் செந்தூல் சிஐடியின் ஒரு குழுவினர் தொடர் சோதனைகளை நடத்தியதாகவும், அதில் 26 முதல் 35 வயதுடைய இரண்டு வாடிக்கையாளர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்ததாகவும் அவர் புதன்கிழமை (செப்டம்பர் 28) செய்தியாளர்களிடம் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மதிப்பு குறைந்தது RM60,000 இருக்கும் என்றும் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், அமீர் என்று அழைக்கப்படும் 26 வயது நபர் இக்கும்பலை வழிநடத்தியது தெரியவந்தது.

“இந்தக் குழு யமஹா மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள்களை குறிவைப்பதாகவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உதிரிபாகங்களுக்காக கறுப்பு சந்தையில் விற்கப்பதாகவும் ” விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்

அந்தக் கும்பல் மோட்டார் சைக்கிள் கைப்பிடி பூட்டை உடைத்து, அவற்றை வீட்டிற்கு இழுத்துச் செல்லும், பின்னர் அவற்றின் சேஸ் மற்றும் என்ஜின் எண்களை அடையாளம் தெரியாதமாறு சேதப்படுத்துவார்கள்.

“இந்தக் குழு ஒவ்வொரு சைக்கிளையும் RM2,000 முதல் RM5,000 வரை விற்கிறது என்று தாங்கள் நம்புவதாக கூறினார்.

இந்தக் கும்பல் நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால், சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை மேலதிக விசாரணைக்காக கோம்பாக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று ACP பெ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here