இங்கிலாந்தின் தடுப்பு மருந்து குழுவில் மலேசிய டாக்டர் அமலினா

கோலாலம்பூர், ஏப்.24-

இங்கிலாந்தின் தடுப்பூசி சோதனைகளில் முதன்மையானது டாக்டர் கத்ரீனா பொல்லாக் தலைமையிலான என்ஐஎச்ஆர் இம்பீரியல் மருத்துவ ஆராய்ச்சி அங்குள்ள இம்பீரியல் காலேஜில் தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் இதற்கான ஆட்சேர்ப்பு செய்வதிலும் அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதிலும் ஈடுபட்டுள்ளதாக டாக்டர் அமலினா தெரிவித்துள்ளார். இச்செய்தியை புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

உலகெங்கிலும் மக்களை பாதித்த கோவிட் -19 தொற்றுக்கு எதிரான சுகாதாரப் யுத்தத்தில் தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக மலேசியாவைச் சேர்ந்த பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நூர் அமலினா சே பக்ரி லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

டாக்டர் அமலினா தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில், இம்பீரியல் கல்லூரியின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்ஐஎச்ஆர்) நடத்தப்படும் தடுப்பூசி சோதனைகளை எளிதாக்குவதற்காக ஐக்கிய குடியரசை மையமாகக் கொண்ட தன்னார்வலர்களை நியமிப்பதில் ஈடுபட்டுள்ளதாகக் ட்வீட் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவர், தடுப்பூசி கண்டுபிடிப்பில் மூத்த மருத்துவ ஆராய்ச்சி உறுப்பினராகவும், லண்டன் இம்பீரியல் கல்லூரி , இம்பீரியல் கல்லூரிகளில் உடல் சுகாதாரம், என்.எச்.எஸ் அறக்கட்டளையில் மரபணு , எச்.ஐ.வி மருத்துவத்தில் , ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இம்பீரியல் கல்லூரியில் கையாளப்படும் பரிசோதனைகளில் தடுப்பூசிகள் ச்சொதனைகளும் ஒன்றாகும்.  இம்பீரியல் ஆய்வுக் குழுவினர்களிடமிருந்து சிறந்த முடிவைக் காண மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றார் அவர்.

இது, ஆக்ஸ்போர் மருத்துவக்கழகத்தின் ஒத்துழைப்பு ஆய்வாகும்.. இம்பீரியல் , ஆக்ஸ்போர்டு இரண்டும் ஒரே தடுப்பூசியை சோதிக்கின்றன.  இதற்கான தன்னார்வ பங்கேற்பாளர்களைக் கோரும் @ இம்பீரியல் மெட்டின் ட்வீட்டையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தின் சுகாதார செயலர் மாட் ஹான்காக் , தடுப்பூசிகளுக்கான முதல் மனித சோதனைகள் இங்கிலாந்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தொடங்குகியது என்றார் . ஆக்ஸ்போர்டு இம்பீரியல் நிறுவனங்களில் உள்ள 2 முன்னணி இங்கிலாந்து தடுப்பூசி குழுக்களுக்கு வழங்குவதற்கான இதன் முடிவு வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை இம்பீரியல் விரைவாகக் கண்டறிய இங்கிலாந்து அரசு 22.5 மில்லியன் டாலர்களை வழங்கவிருப்பதாகவும் செய்திகள் கிடைத்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here