கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களுடன் நவராத்திரி விழாவில் பாஜக-வின் சுப்பிரமணிய சாமி

கொழும்பு, செப்.30:

பாரத ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாாமி, இலங்கை முன்னாள் அதிபர்களான மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சேக்களின் குடும்ப நண்பர் ஆவார். அவர்களை கொழும்புவில் அடிக்கடி சந்தித்தும் வருகிறார்.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் சுப்பிரமணிய சாமி பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து நேற்று கோத்தபய ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார். இந்த தகவல்களை ராஜபக்சே குடும்ப வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதிபர் பதவியில் இருந்து விலகி வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, சமீபத்தில்தான் தாய்நாடு திரும்பி இருந்தார். இந்த சூழலில் அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்பிரமணிய சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here