உடலுறுப்பு விற்பனை குறித்து போலீசாரின் எச்சரிக்கை அறிக்கையா? செய்தியில் உண்மையில்லை

சமூக ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளபடி, மனித உறுப்புகள் விற்பனையுடன் தொடர்புடைய கடத்தல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் எந்த அறிக்கையும்  காவல்துறை வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. ஃபெடரல் போலீஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஸ்கந்தகுரு கூறுகையில், ‘அனைத்து பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை, மலேசியாவில் உறுப்பு விலைகள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை போலீசார் கண்டறிந்துள்ளனர். அதில் இதயம், சிறுநீரகம், கண், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளின் விலையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் உறுப்புகளை கடத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தப்படும் இரண்டு வெள்ளை நிற வாகனங்கள் குறித்து பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் எச்சரித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுவரை, வைரல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வாகனங்கள் தொடர்பான எந்த புகாரும் காவல்துறைக்கு வரவில்லை என்று அவர் சனிக்கிழமை (அக். 1) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மையை முதலில் சரிபார்க்காமல் எளிதில் நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். மனித உறுப்புகள் RM10,000 முதல் RM800,000 வரை விற்பனைக்கு இருப்பதாகவும் அந்த வைரல் செய்தி கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here