ஆஸ்திரேலியாவில் கத்திக் குத்துக்கு உள்ளாகி தீவிர சிகிச்சையில் உள்ள இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு விசா வழங்க ஏற்பாடு!

சிட்னி, அக்டோபர் 14 :

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த 28 வயதான சுபம் கார்க் என்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், சிட்னி நகரில் 27 வயதான டேனியல் நோர்வுட் என்ற வாலிபர் சரமாரியாக பலமுறை இந்திய மாணவனை கத்தியால் குத்தினார். இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தெப்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். அவர் உயிருக்கு ஆபத்தில்லை, ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தார் ஒருவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புதுடெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. குடும்ப உறுப்பினருக்கு ஆஸ்திரேலிய விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த மாணவரை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த இந்திய மாணவனை வழியில் மறித்த அந்த வாலிபர் அவரிடமிருந்த பணத்தையும் போனையும் கேட்டுள்ளார். ஆனால் அவற்றை தர மறுத்துவிட்டார். உடனடியாக அந்த வாலிபர் மாணவனை கத்தியால் குத்தியாதாக விசாரணையில் தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here