அம்பாங் பார்க்கிலிருந்து கிளானா ஜெயா வரையிலான இலகு ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

கோலாலம்பூர், நவம்பர் 14:

சுமார் ஒரு வார கால சேவை தடையின் பின்னர், பாதிக்கப்பட்ட அம்பாங் பார்க் – கிளானா ஜெயா இலகு ரயில் சேவைகள்( LRT) இன்று காலை 6 மணிக்கு பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

KL சென்ட்ரல், பசார் சினி மற்றும் மஸ்ஜித் ஜமேக் நிலையங்களில் – மிகவும் பரபரப்பான நிலையில் வழமைபோல காணப்பட்டன. அங்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ரயில் நிலையங்களில் துணை போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை நேரத்தில் அனைத்து ரயில்களும் பயணிகளால் நிரம்பியிருந்தன.

ஒரு துணை போலீஸ்காரர் கூறுகையில், இங்கு வழக்கமாக காலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும், மேலும் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது. இன்று கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு நிலையத்திலும் எங்களிடம் அதிகாரிகள் உள்ளனர், என்று அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை (நவம்பர் 5) குறித்த ரயில் சேவையின் தானியங்கி கட்டுப்பாட்டில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here