வைரலான ‘Destroy Tok Mat’ பதிவு போலியானது என்கிறார் கைரி

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 17 :

சமூக வலைத்தளங்களில் “அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் அரசியல் வாழ்க்கையை இல்லாது ஒழிக்க, ஒரு நபருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படும்” குற்றச்சாட்டுகளுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற வேட்ப்பாளர் கைரி ஜமாலுடின் மறுப்புத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கைரி தனது அதிகாரப்பூர்வ டுவீட்டர் கணக்கில் ஒரு ஸ்கிரீன்ஷாட்டினை வெளியிட்டு, “போஸ் KJ “ என்னும் பதிவோடு பகிரப்படும் செய்தி போலியானது என்றும் எனக்கு இப்படி அவதூறு பரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

அந்த போலிச் செய்தியை பதிவேற்றிய ” Dr. Bigger Balls என்ற கணக்கின் உரிமையாளர் மீது போலீஸ் மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் ஆகியவற்றில் புகாரளிக்கப்படும் ,” என்றும் அவர் கூறினார்.

நேற்று சமூக அவளைத்த்தலங்களில் வைரலான அந்த ஸ்கிரீன்ஷாட்டில், ‘Boss KJ’ என்று கூறிக்கொள்ளும் ஒரு நபரிடம், கைரியின் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான ரெம்பாவில் போட்டியிடும் டோக் மாட்டின் அரசியல் வாழ்வை இல்லாது ஒழிக்குமாறு கைரி கேட்டுள்ளார்” .  அந்த  ஸ்கிரீன் ஷாட்டை டுவீட்டர் பயனர் ” Dr. Bigger Balls வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here