மென்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகுவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு

மென்செஸ்டர், 23 நவம்பர் :

மென்செஸ்டர் யுனைடெட் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததன் விளைவாக, அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அக்கிளப்பை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இவரின் அறிவிப்பு மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட் காற்பந்து அணி தமக்குத் துரோகம் செய்து விட்டதாகவும், அணியிலிருந்து தம்மை வெளியேற்றுவதற்குச் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்மையில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் மென்செஸ்டர் யுனைடெட் பயிற்றுநர் மீதும் அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவரின் இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து உடனடியாக விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here