“பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு இஸ்ரேலிய முகவர் “ எனக் கூறியது தொடர்பில் ஹாடி அவாங்கிடம் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், நவம்பர் 29 :

“பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு இஸ்ரேலிய முகவர் “ என்று பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் குற்றஞ்சாட்டியது தொடர்பில் போலிசார் விசாரிக்கின்றனர்.

இந்த விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு (USJT), வழக்கு/சட்டப் பிரிவு (D5), குற்றப் புலனாய்வுத் துறை (JSJ), புக்கிட் அமான் ஆகியோர் நடத்தியதாக ரோயல் மலேசியன் போலீஸ் செயலாளர் டத்தோ நூர்சியா சாதுடின் கூறினார்.

மேலும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500 , 504 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தனக்கு எதிரான அவதூறு குறித்து விசாரிக்குமாறு அன்வார் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதாக, நேற்று PKR தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியிருந்தார்.

அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக PKR சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் என்றும் ஃபாஹ்மி மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here