‘சந்திரமுகி 2 ‘ படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது.

பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த நிலையில் ‘சந்திரமுகி 2’ ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here