பெண்கள் நிதி சுதந்திரம் பெற்றதால் விவாகரத்து நடக்கிறது – நடிகை நீனா குப்தா

பிரபல இந்தி நடிகை நீனா குப்தா (வயது 63). இவர் இந்தி திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் மசாபா குப்தா (வயது 33). மசாபா குப்தா மாடலிங் துறையில் உள்ளார்.

இதனிடையே, மசாபா குப்தா கடந்த 2015-ம் ஆண்டு தொழிலதிபர் மது மண்டினாவை திருமணம் செய்தார். பின்னர், 4 ஆண்டுகள் கழித்து இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர். மசாபா குப்தா தற்போது நடிகர் சத்யதீப் மிஸ்ராவுடன் பழகி வருகிறார். இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நீனா குப்தா நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தற்போது இளம்பெண்கள் நிதி ரீதியில் சுதந்திரமடைந்துள்ளனர். ஆண்களிடமிருந்து எதுவும் பெறவில்லை. ஆகையால் தான் விவாகரத்துக்கள் நடக்கின்றன. முந்தைய காலத்தில் அமைதியாக கஷ்டப்படுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஆனால், நிறைய வழிகளில் திருமணம் என்பது ஒரு நல்ல அமைப்பு என்று நான் நம்புகிறேன். ஆகையால், எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here