சீனாவின் ‘டிக்டாக் செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது

அமெ­ரிக்­கா­வின் மத்­திய அரசு, அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான கைத்­தொ­லை­பேசி போன்ற கரு­வி­களில் சீனா­வின் ‘டிக்டாக்’ செய­லி­யைப் பயன்­படுத்த தடை விதிக்­கும் மசோ­தாவை அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றம் நேற்று முன்­தி­னம் நிறை­வேற்­றி­யது.

சீனக் கரு­வி­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் பயன்­ப­டுத்தி அமெ­ரிக்­காவை சீனா உள­வு­பார்க்­கக் கூடும் என்ற தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்­கும் வகை­யில் அமெ­ரிக்கா எடுத்த நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று.

வட டக்­கோட்டா, ஐயோவா உள்­ளிட்ட பல அமெ­ரிக்க மாநி­லங்­களில் சீனா­வின் டிக்­டாக் செய­லிக்­குத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. அதை­ய­டுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக மத்­திய அர­சாங்­கத் துறை­கள் பல­வற்­றி­லும் இந்­தச் செய­லிக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ‘டிக்டாக்’ செயலி ‘பைட்­டான்ஸ்’ என்­னும் சீன நாட்டு நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மா­னது. அந்­தச் செயலி மூலம் பரி­மா­றிக்­கொள்­ளப்­படும் தக­வல்­க­ளின் தர­வு­களை சீன அர­சாங்­கத்­திற்கு அந்த நிறு­வ­னம் கொடுக்­க­லாம் என்ற அச்­சமே இதற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here